வந்தவாசியில் கடையில் பதுக்கி வைத்திருந்த ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்கா பறிமுதல்

வந்தவாசியில், கடையில் பதுக்கி வைத்திருந்த, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை, போலீசார் பறிமுதல் செய்து, இருவரை கைது செய்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி டவுன் பகுதியை சேர்ந்த சங்கர்லால், 28, மொத்த விற்பனை கடை வைத்துள்ளார். இவரது, கடையில் குட்கா விற்பனை செய்யப்படுவதாக, வந்தவாசி குற்றப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார், நேற்று அங்கு சென்று, சோதனை நடத்தினர். அப்போது, கடையில் பதுக்கி வைத்திருந்த, ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர். கடை உரிமையாளர் சங்கர்லால், அவரது தம்பி சேட்டான் ,22, தப்பியோடினர். கடை ஊழியர்களான சிவராம் ,21, அரிஷ்,20, ஆகிய, இரண்டு பேரை, போலீசார் கைது செய்தனர். தலைமறைவாக உள்ளவர்களை, போலீசார் தேடி வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!