தமிழ்நாடு பாஜகவில் மூத்த தலைவர்களில் ஒருவராக விளங்குபவர் பொன்.ராதாகிருஷ்ணன். கடந்த மக்களவை தேர்தலில் தோல்வியை தழுவிய நிலையில் கட்சி பணிகளில் ஈடுபட்டுள்ளார். சமீப காலமாக பெரிதாக எங்கும் தலைகாட்டாத நிலையில் இன்று தனது 71வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். தமிழ்நாட்டில் அண்ணாமலை பரபரப்பாக அரசியல் செய்து வரும் நிலையில் பொன்னார் தற்போது சைலண்ட் மோடில் இருந்து வருகிறார். மக்களவை தேர்தல்அடுத்த ஓராண்டில் மக்களவை தேர்தல் வரவுள்ள சூழலில் மீண்டும் கன்னியாகுமரி தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. முன்னதாக இல.கணேசன், தமிழிசை, சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆளுநர்களாக சென்று விட்டனர். இந்த வரிசையில் பொன்னாரும் இடம்பெறுவாரா? இல்லை மத்திய அமைச்சரா? என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இவரது பின்னணி குறித்து பார்க்கலாம். காங்கிரஸ் குடும்பம்காமராஜருக்கு நெருக்கமான காங்கிரஸ் குடும்பத்தில் மார்ச்
Read More