வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளை இ – சேவை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த 56,996 புதிய வாக்காளர்கள், தங்களுக்கான வண்ண வாக்காளர் அடையாள அட்டைகளை இ – சேவை மையங்களில் பெற்றுக்கொள்ளலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, 2017 ஜனவரி 1-ஆம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. கடந்த ஜனவரி 5-ஆம் தேதி வெளியிடப்பட்ட இந்த வாக்காளர் பட்டியலில் திருவண்ணாமலை மாவட்டத்தில் 56,996 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர்.
இவர்களுக்கான வண்ண வாக்காளர் அடையாள அட்டைகள், அந்தந்த வட்டாட்சியர் அலுவலக வளாகங்களில் உள்ள இ – சேவை மையங்களில் தற்போது வழங்கப்படுகின்றன.
எனவே, மாவட்டத்தைச் சேர்ந்த புதிய வாக்காளர்கள் தங்களது செல்லிடப்பேசிக்கு குறுஞ்செய்தி மூலம் வரப்பெற்ற கடவுச்சொல்லையோ அல்லது ஏதேனும் புகைப்பட அடையாளச் சான்றையோ காண்பித்து இலவசமாக வண்ண வாக்காளர் அடையாள அட்டையை பெற்றுக் கொள்ளலாம். சந்தேகங்களுக்கு வட்டாட்சியர் அலுவலக தேர்தல் பிரிவை அணுகலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!