வந்தவாசியில் இயங்கி வந்த தூர்தர்ஷன் தொலைக்காட்சி சேவை மார்ப் 12 முதல் நிறுத்தப்படுகிறது

வந்தவாசி, ஆரணி, செய்யாறு பகுதிகளில் இயங்கி வந்த தூர்தர்ஷன் தொலைக்காட்சி அஞ்சல் நிலையங்களில் திங்கள்கிழமை முதல் தொலைக்காட்சி சேவைகள் நிறுத்தப்படுகின்றன.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, செய்யாறு, வந்தவாசி பகுதிகளில் குறைந்த சக்தி தொலைக்காட்சி அஞ்சல் நிலையங்கள் இயங்கி வந்தன. இந்த அஞ்சல் நிலையங்களில் இருந்து தூர்தர்ஷன் தேசிய மற்றும் மண்டல அளவிலான நிகழ்ச்சிகள் ஒளிபரப்பு செய்யப்பட்டு வந்தன.
இந்த நிலையில், பிரசார் பாரதி வாரியம் இந்த தொலைக்காட்சி அஞ்சல் நிலையங்களில் இருந்து திங்கள்கிழமை (மார்ச் 12) தனது சேவையை நிரந்தரமாக நிறுத்த முடிவு செய்துள்ளது.
இருப்பினும், இந்த சேவை மற்றும் தூர்தர்ஷன் அனைத்து சேனல்களும் டிடிஃபிரி டிஷ், டிடிஎச் செட்டாப் பாக்ஸ் மூலம் கட்டணமின்றி கிடைக்கும் என்று வேலூர் தூர்தர்ஷன் நிறுவன துணை இயக்குநர் எஸ்.சின்னசாமி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!