திருவண்ணாமலை மாவட்டத்தில் 33369 மாணவ மாணவிகள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதுகின்றனர்

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 16 ஆயிரத்து,743 மாணவர்கள், 16 ஆயிரத்து,626 மாணவிகள் உள்பட, 33 ஆயிரத்து,369 பேரும் எழுதுகின்றனர். 115 தேர்வு மையங்களும் அமைக்கப்பட்டுள்ளது. முறைகேடுகள் நடைபெறாமல் தடுக்க, பத்து தேர்வு மையங்களுக்கு ஒரு பறக்கும் படை வீதம் 48 பறக்கும் படைகள் அமைக்கப்பட உள்ளது. மாணவர்கள் மட்டுமின்றி, தலைமை ஆசிரியர்கள், தேர்வு அறை கண்காணிப்பாளர்கள் உள்பட யாரும் தேர்வு மையத்துக்குள் மொபைல்போன் பயன்படுத்தக் கூடாது. அதிகாரிகளுடன் தொடர்புகொள்ள, பள்ளியில் உள்ள தொலைபேசியை மட்டுமே (லேண்ட் லைன்) பயன்படுத்த வேண்டும். ஒவ்வொரு தேர்வு மையத்துக்கும் தலா, மூன்று போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவர் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். 33369

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!