கிராமிய அஞ்சலக ஊழியர் பணிக்கு விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

திருவண்ணாமலை அஞ்சலக கோட்ட கண்காணிப்பாளர் சந்திரசேகரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:–

இந்திய தபால் துறையில் காலியாக உள்ள கிராமிய அஞ்சலக ஊழியர் காலி பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தபால்துறை கடந்த மாதம் அறிவித்தது. இப்பணிக்கான கல்வித்தகுதி 10–ம் வகுப்பு மற்றும் அதற்கு சமமான கல்வி தகுதி பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு 18–வயதில் இருந்து 40 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்க உள்ளவர்கள் indiapost.gov.in and appost.in/gdsonline என்ற இணையதளம் மூலம் கடந்த 9–ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இணையதள கோளாறு காரணமாக 24–ந் தேதி (புதன்கிழமை) வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் அளிக்கப்பட்டது.

தற்போது இந்த காலஅவகாசம் வருகிற 5–ந் தேதி (திங்கட்கிழமை) வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி கிராமிய அஞ்சலக ஊழியர் பணிக்கு விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் அறிவிக்கப்பட்டுள்ள தேதிக்குள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.

Yuvaraj V

Journalist , Digital Media Consultant.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *