விர்ச்சுவல் கரன்சி பற்றிய அறிவிப்பு பட்ஜெட்டில் இடபெறவில்லை

கிரிப்டோ கரன்சி என்றழைக்கப்படும் பிட்காயின், லைட்காயின் போன்ற விர்ச்சுவல் கரன்சி  பற்றிய கொள்கை முடிவு இந்த பட்ஜெட்டில் இடம் பெறும் என்று பெரும்பாலான பொருளாதார நிபுணர்கள் எண்ணி வந்த நிலையில் அதை பற்றி பட்ஜெட்டில் இடம் பெறவில்லை.

கடந்த ஏப்ரல் மாதம் விர்ச்சுவல் கரென்சி எக்ஸ்ஜேஞ்கள் வங்கி பண பரிவர்தனையில் ஈடு பட கூடாது என்று சுற்றரிக்கை அனுப்பியது ஆர்.பி.ஐ. இதன் மூலம் விர்ச்சுவல் கரன்சிக்கு இந்தியாவில் தடை வரலாம் என பெரும்பாலான முதலீட்டாளர்கள் கவலை அடைந்தனர். சிலர் பிட்காயின் உட்பட எந்த கரென்சி பரிவர்தனையில் ஈடுபட்டாலும் அது தண்டனைக்குரிய குற்றமாக கருதப்பட்டு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படலாம் என்ற பீதியை உருவாக்கினர்.

ஆர்.பி.ஐ.யின் சுற்றறிக்கை காரணமாக சில பிரபல விர்ச்சுவல் கரென்சி எக்ஸ்சேஞ்கள் மூடப்பட்டன.

2019 பட்ஜெட்டில் இதற்கான தீர்வு கிடைக்கும் என்று எதிர்பார்த்த நிலையில் இதனை பற்றி ஒன்றும் இடம்பெறவில்லை. உச்ச நீதி மன்றத்தில் சிறிது நாட்களில் வழக்கு வருவதால் அடுத்த மாதம் விர்ச்சுவல் கரென்சி டிரேடிங் பற்றிய முடிவுவை மத்திய அரசு எடுக்கக்கூடும் என தெரியவருகிறது.

இதனிடைய பிரபல பேஸ்புக் நிறுவனம் தனது விர்ச்சுவல் கரன்சியான லிப்ராவை அடுத்த ஆண்டு வெளியிட உள்ளது. ஆனால் இந்தியாவில் இதனை பரிவர்தனை செய்ய அனுமதிக்காது என தெரியவருகிறது.

1613total visits,17visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *