வந்தவாசி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மயானக்கொள்ளை விழா

வந்தவாசி அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் மயானக்கொள்ளை விழா சனிக்கிழமை நடைபெற்றது.

வந்தவாசி சன்னதி தெரு – பருவதராஜகுல வீதி சந்திப்பில் உள்ள ஸ்ரீஅங்காள பரமேஸ்வரி அம்மன் கோயிலில் மயானக்கொள்ளை விழா நடைபெற்றது. இதனை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை காலை அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இரவு மகா சிவராத்திரி உற்சவம் நடைபெற்றது. இதையொட்டி, புஷ்ப பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்தார்.
இதைத் தொடர்ந்து, சனிக்கிழமை மயானசூறை உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு, காலையில் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பின்னர், சிம்ம வாகன மகிடாசூர சம்ஹார அலங்காரத்தில் அம்மன் வீதியுலா வந்தார். கோயிலில் இருந்து தொடங்கிய அம்மன் வீதியுலா பருவதராஜகுல வீதி, அச்சரப்பாக்கம் சாலை, பாலுடையார் தெரு, சன்னதி தெரு வழியாகச் சென்றது.
பக்தர்கள் காளி வேடமணிந்தும், உடலில் எலுமிச்சை பழம் குத்திக் கொண்டும், முதுகில் அலகு குத்தி உரல் இழுத்துக் கொண்டும் உடன் சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!