ஆசிரியர் தகுதித்தேர்வு (TET) விண்ணப்பங்கள் வந்தவாசியில் 4 பள்ளிகளில் விநியோகம்

திருவண்ணாமலை மாவட்டத்தில் வந்தவாசியில் 4 பள்ளிகள் உட்பட 26 இடங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள் திங்கள்கிழமை (மார்ச் 6) முதல் விற்பனை செய்யப்படுகின்றன.

தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் – 1, தாள் – 2 தேர்வுகள் முறையே ஏப்ரல் 29, 30-ஆம் தேதிகளில் நடைபெற உள்ளன. இதற்கான விண்ணப்பங்கள் மார்ச் 6 முதல் 22-ஆம் தேதி வரை விடுமுறை நாள்களைத் தவிர அனைத்து நாள்களிலும் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை விற்பனை செய்யப்பட உள்ளது.

ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ. 50. ஒருவருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும். தாள் – 1, தாள் – 2 ஆகிய இரு தேர்வுகளை எழுத விரும்புவோர், தனித் தனியே விண்ணப்பம் வாங்கி விண்ணப்பிக்க வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில்
செங்கம் பாரத் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
ஸ்ரீவிவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
எலத்தூர் ஸ்ரீசரவணா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
சோமாசிபாடி அண்ணாமலை மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
வேட்டவலம் மூர்த்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
வசூர் அகஸ்தியா வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களிலும்,

போளூர் டவுன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
புதுப்பாளையம் ஸ்ரீசாரதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
காஞ்சி செயின்ட் ஆன்டனிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
தானிப்பாடி கிறுஸ்து ஜோதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
தண்டராம்பட்டு லூர்து மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
காரியந்தல் மேரி இமாகுலேட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,

திருவண்ணாமலை கிருஷ்ணா வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
திருவண்ணாமலை மவுன்ட் செயின்ட் ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,

ஆரணி சி.எஸ்.ஐ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
ஆரணி ஸ்ரீபாலவித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,

செய்யாறு டாக்டர் வி.கெங்குசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களிலும்,

செய்யாறு ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
பெரணமல்லூர் சித்தார்த்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
தெள்ளாறு அரவிந்த் இன்டர்நேஷ்னல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
வந்தவாசி அகஸ்தியா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
வந்தவாசி எஸ்.ஆர்.ஐ. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
வந்தவாசி வெங்கடேஷ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
தேவிகாபுரம் குளுனி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
கண்ணமங்கலம் வேல்ஸ் வித்யாஷரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,
வந்தவாசி ஸ்ரீபாரத மாதா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி ஆகிய இடங்களிலும் விண்ணப்பங்கள் விற்கப்பட உள்ளன.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை மார்ச் 30-ஆம் தேதிக்குள் குறிப்பிட்ட மையங்களில் அளிக்க வேண்டும்.

ஒரு மாவட்டத்தில் விண்ணப்பம் பெறப்பட்டிருப்பினும், மற்றொரு மாவட்டத்தில் பூர்த்தி செய்து விண்ணப்பத்தை அளிக்கலாம் என்று மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ஜெயக்குமார் தெரிவித்தார்

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!