குழந்தை கடத்தல் போன்ற, தவறான கருத்துகளை, சமூக வலைதளங்களில் பரப்பும் நபர்கள் மீது, கடும் நடவடிக்கை-திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி

குழந்தை கடத்தல் போன்ற, தவறான கருத்துகளை, சமூக வலைதளங்களில் பரப்பும் நபர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என, திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி., பொன்னி தெரிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: கடந்த சில நாட்களாக, குழந்தைகளை கடத்தும் வட மாநிலங்களை சேர்ந்தவர்கள் மற்றும் திருடர்கள் என, சமூக வலைதளங்களில் தவறாக பரவிவரும் வதந்திகளை, பொதுமக்கள் நம்பி, அவர்களை அடித்து துன்புறுத்துவது தொடர் நிகழ்ச்சியாக உள்ளது. இது, சட்டத்திற்கு புறம்பானதாகவும், மனித உரிமைக்கும் எதிரானதாகவும் உள்ளது. இது போன்ற தவறான கருத்துகளை, சமூக வலைதளங்களில் பரப்பும் நபர்கள் மீது, கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். சந்தேக நபர்கள் யாரேனும் நடமாடுவதாக, தெரியவந்தால், அவர்களை அடித்து துன்புறுத்தாமல், திருவண்ணாமலை மாவட்ட எஸ்.பி., அலுவலக தொலைபேசி எண்களில் 94981 00430 (வாட்ஸ் ஆப் ) மற்றும் 0417 523 3633 தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!