துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் 60 பேர் பணியிட மாற்றம்-மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவு

திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்களாக பணிபுரியும் 60 பேரை பணியிட மாற்றம்
செய்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றிலும், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட அலுவலர் அலுவலகத்திலும் துணை வட்டார வளர்ச்சிஅலுவலர்களாக பலர் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களில் நீண்ட காலமாக ஒரே இடத்தில் பணிபுரிபவர்கள், புகார்களுக்குள்ளானவர்கள் என 60 பேரை வேறு வேறு
ஒன்றியங்களுக்கு பணியிட மாறுதல் செய்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார். பணியிட மாற்றம் செய்யப்பட்டவர்கள் உடனடியாக புதிய பணியிடத்தில்
சேர வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டுள்ளார். இதுதவிர, ஊரக வளர்ச்சித் துறையில் உதவியாளர்களாகப் பணிபுரியும் 7 உதவியாளர்களுக்கு துணை வட்டார வளர்ச்சி
அலுவலர்களாக பதவி உயர்வு அளித்தும் ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி உத்தரவிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!