ஐபீபிஎஸ் தேர்வு அறிவிப்பு

பாண்டியன் வங்கி, பல்வன் வங்கி, திரிபுரா கிராமிய வங்கி, காவிரி கிராமிய வங்கி போன்ற 59 அரசுமயமாக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகளில் ஏற்பட்டுள்ள 10 ஆயிரத்து 190 பணியிடங்களுக்கான வங்கி அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர் (மல்டிபர்பஸ்) பணிகளுக்கான பொது எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை வங்கி பணியாளர் தேர்வு நிறுவனம் (ஐபீபிஎஸ்)வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

வங்கி பணியே தனது இலக்கு என்ற நோக்குடன் காத்திருக்கும் ஆண்கள், பெண்கள் பயன்பெறும் வகையில் வங்கித்துறையில் 2018 – 2019-ஆம் ஆண்டிற்கான 10 ஆயிரத்து 190 அதிகாரிகள் மற்றும் அலுவலக உதவியாளர் காலிப் பணியிடங்களுக்கு தகுதியானவர்களை தேர்வு செய்வதற்கான போட்டித்தேர்வுகளுக்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

முழுமையான பணியிட விவரம் மற்றும் ஒதுக்கீடு வாரியான பணியிடங்களை அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

பணி: Group “A”-Officers (Scale-I, II & III) மற்றும் Group “B”-Office Assistant (Multipurpose)

காலியிடங்கள்: 10190

வயது வரம்பு: விண்ணப்பதாரர்கள் 01.6.2018 தேதியின்படி 21 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். அதாவது விண்ணப்பதாரர்கள் 03.06.1978-ஆம் தேதிக்கு முன்னரும், 31.05.1997-ஆம் தேதிக்குப் பிறகும் பிறந்திருக்கக் கூடாது. குறிப்பிட்ட பிரிவினருக்கு அரசு விதிகளின்படி வயது வரம்புத் தளர்வு அனுமதிக்கப்படும்.

கல்வித்தகுதி: அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களில் ஏதாவதொரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். 02.07.2018-ஆம் தேதியின் அடிப்படையில் தகுதி சரிபார்க்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: முதல் நிலை எழுத்து தேர்வு, முதன்மை எழுத்து தேர்வு மற்றும் பொது நேர்காணல் நடத்தப்பட்டு தேர்ச்சி பெறுபவர்களுக்கு மதிப்பெண் அட்டை வழங்கப்படும். இதன் மூலம் வங்கிகள் பணியிடங்களை அறிவிக்கும்போது விண்ணப்பித்து பணி வாய்ப்பை பெறலாம்.

விண்ணப்பக் கட்டணம்: எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.100, மற்ற பிரிவினர்களுக்கு 600. இதனை ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை: விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் www.ibps.in இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம். புகைப்படம் மற்றும் கையப்பம் பதிவேற்றம் (அப்லோடு) செய்ய வேண்டும் என்பதால் முன்கூட்டியே அவற்றை ஸ்கேன் செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இறுதியாக கட்டணம் செலுத்திவிட்டு, பூர்த்தியான விண்ணப்ப படிவம் மற்றும் கட்டண ரசீது ஆகியவற்றை எதிர்கால பயன்பாட்டிற்காக கணினிப் பிரதி எடுத்து வைத்துக் கொள்ளவும்.

விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 08.06.2018

ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 02.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://www.ibps.in/wp-content/uploads/Detail_Advt_CRP_RRB_VII.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்து படித்து தெரிந்துகொள்ளவும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!