திருவண்ணாமலை மாவட்ட ஊர்க்காவல் படையில் சேர இன்று முதல் விண்ணப்பம்

இதுக்குறித்து மாவட்ட காவல் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
திருவண்ணாமலை மாவட்ட ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 43 இடங்களில் சேர விரும்புவோர் வெள்ளிக்கிழமை (ஜனவரி 5) முதல் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்டக் காவல் துறை தெரிவித்தது.
திருவண்ணாமலை மாவட்ட ஊர்க்காவல் படைக்கு 37 ஆண்கள், 6 பெண்கள் உள்பட மொத்தம் 43 பேர் தேர்வு செய்யப்பட்ட உள்ளனர். இதில், அரசு ஊழியர்கள், தனியார் நிறுவன ஊழியர்கள், தன்னார்வ தொண்டு செய்ய விருப்பம் உள்ளவர்கள், செவை மனப்பான்மை கொண்ட
10-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தேர்வு செய்யப்படுவோருக்கு ஊக்கத் தொகையாக நாள் ஒன்றுக்கு ரூ.560 வீதம் வழங்கப்படும். எனவே, ஊர்க்காவல் படையில் சேர விருப்பமும், தகுதியும் உள்ளவர்கள் வரும் 8-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பங்கள் வெள்ளிக்கிழமை முதல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் உள்ள ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!