மானியத்துடன் நெல், உளுந்து விதைகளைப் பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு

மானியத்துடன் நெல், உளுந்து விதைகளைப் பெற விவசாயிகளுக்கு வேளாண் துறை அழைப்பு விடுத்துள்ளது.

இதுகுறித்து அனக்காவூர் வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் ஏ.எம்.சாந்தி வெளியிட்ட செய்திக் குறிப்பு: சித்திரைப் பட்டத்துக்குத் தேவையான நெல் கோ.51,
உளுந்து வெம்பன் 5, வெம்பன் 6 ஆகிய விதைகள் அனக்காவூர் வேளாண்மை விரிவாக்க மையத்தில் இருப்பு உள்ளது.மானியத்துடன் கிடைக்கக்கூடிய இந்த நெல், உளுந்து விதைகளைத் தேவைப்படும் விவசாயிகள் ஆதார் அட்டை நகலுடன் சென்று பெற்றுக் கொள்ளலாம் என ஏ.எம்.சாந்தி தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!