கள்ளக்காதல்… சென்னையை சேர்ந்தவர் வந்தவாசியில் கொலை… மனைவி கைது

கள்ளக்காதலுக்கு தடையாக இருந்த கணவனை கொன்று வந்தவாசியில் புதைத்த மனைவி, தாய்மாமன் கைது செய்யப்பட்டனர்.

இது தொடர்பாக காவல்துறை தரப்பில் கூறப்படுவதாவது..

சென்னை முகவலிவாக்கம் அருகேயுள்ள மேட்டுக்குப்பத்தை சேர்ந்த அன்பழகன் (வயது29) எனபவர் தனியார் நிறுவனத்தில் காவலராக பணியாற்றி வந்தார். இவருக்கு மனைவி நதியா (வயது 23), கோபிகா (வயது 6) தவஸ்ரீ (வயது 3) என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

அன்பழகனுக்கும், நதியாவுக்கும் திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகி உள்ளன. இந்நிலையில் அன்பழகனிடம் நதியாஅடிக்கடி சண்டையிட்டு கோபித்துக் கொண்டு அவரது அம்மா வீட்டுக்கு சென்று விடுவாராம்.

இந்த நிலையில், கடந்த மார்ச் 17-ந்தேதி நதியா தனது கணவரை காணவில்லை என்று மாங்காடு காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார்.

வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் பல்வேறு கோணங்களில் விசாரித்துள்ளனர். இந்த நிலையில் அன்பழகன் காணாமல் போனது குறித்து நதியாவின் தாய் மாமன் நாகராஜனை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர், நதியாவுக்கும் தனக்கும் திருமணத்துக்கு முன்பே தொடர்பு இருந்ததாகவும், அடிக்கடி இருவரும் உல்லாசமாக இருந்து வந்தாகவும், இதற்கு அன்பழகன் இடையூறாக இருந்ததால் இருவரும் சேர்ந்து கொலை செய்ய திட்டமிட்டு, வந்தவாசிக்கு அவரை தனியாக அழைத்து சென்று மது வாங்கிக் கொடுத்து அவர் போதையில் இருக்கும்போது கத்தியால் குத்தி கொலை செய்து அங்குள்ள மலையடிவாரத்தில் புதைத்து விட்டதாகவும் தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து நதியாவையும், நாகராஜனையும் கைது செய்த, காவல்துறையினர், அவர்களை அழைத்துக் கொண்டு அன்பழகனின் சடலத்தை மீட்க வந்தவாசி விரைந்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *