இனி பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம்…

ஜூன் 16 முதல் பிளாஸ்டிக்கை பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் முறை அமலுக்கு வந்தது. கடைகளில் இனி பிளாஸ்டிக் கேரிபேக்குகள் உள்பட 14 வகையான  பிளாஸ்டிக் பொருட்களுக்கு ஜனவரி ஒன்றாம் தேதி முதல் பயன்படுத்த தடை அமலுக்கு வந்தது. அதன் தொடர்ச்சியான ஜூன் 16 முதல் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் அபராதம் விதிக்கும் முறை நடைமுறைக்கு வந்தது.

நிறுவனங்கள்  ஓட்டல்களில் முதல்முறை பிளாஸ்டிக் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் 25000 ரூபாயும் இரண்டாவது முறை பிடிபட்டால் 5000 ரூபாயும் மூன்றாம் முறை பிடிபட்டால் 1 லட்சம் ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும். நான்காவது முறைவான பிளாஸ்டிக் பயன்படுத்துவது கண்டுபிடிக்கப்பட்டால் கடை நிறுவனத்தின் உரிமை இரத்து செய்யப்படும்.

வரவேற்பு

புதிய நடைமுறைக்கு பொதுமக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். ஜூன் 16 முதல் பிளாஸ்டிக் உபயோகித்து வந்த ஓட்டல்கள் வாழை இலை. மந்தார இலை என்று மாறி வருகின்றனர். உள்ளாட்சி அமைப்புகள் தொடர் கண்காணிப்பில் பிளாஸ்டிக் உபயோகம் இருக்கும் பட்சத்தில். 90 சதவீத பிளாஸ்டிக் உபயோக குறையும் என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர்.

அபராதம்

அபராதம் நடைமுறைக்கு வந்த முதல் நாளே தமிழகத்தில் கோடி ரூபாய்க்கு மேல் அபராதம் பெறபட்டுள்ளதால். வியாரிகள்  பொதுமக்கள் என அனைவரும் பிளாஸ்டிக்கிற்கு மாற்றாக பிற பொருட்களை உபயோகிக்க துவங்கியுள்ளனர்.

 

1756total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *