ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு

செய்யாறில் தனியார் அறக்கட்டளை சார்பில் மகளிருக்கு அளிக்கப்படவுள்ள ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான இலவசப் பயிற்சிக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பூங்கா- மணி கல்வி அறக்கட்டளைத் தலைவர் சு.கருணாகரன் வெளியிட்ட அறிக்கை:
மகளிருக்கு மட்டும் இலவசமாக அளிக்கப்படும் ஐ.ஏ.எஸ். தேர்வுக்கான இலவச பயிற்சியில் இளங்கலை பட்டம் பெற்றவர்கள், எஸ்.சி., எஸ்.டி இனத்தவர்கள் சாதிச் சான்று, மாற்றுத் திறனாளிகளாக இருப்பின் அதற்கான சான்று, ஆதரவற்றவர்கள் கிராம நிர்வாக அலுவலரின் சான்றுடன் விண்ணப்பிக்கலாம். பதிவுக் கட்டணமாக ரூ.ஆயிரம் செலுத்த வேண்டும். பயிற்சியில் சேர விரும்பும் மாணவிகள் ஆதார் அட்டை நகல், 2 புகைப்படங்கள் ஆகியவற்றுடன் பூங்கா- மணி கல்வி அறக்கட்டளைத் தலைவர் சு.கருணாகரனை 8667676277 என்ற செல்லிடப்பேசியில் தொடர்பு கொள்ளலாம். மேலும், ‌os‌h‌o‌d‌h​a‌r​a18@‌g‌m​a‌i‌l.​c‌o‌m என்ற இணைதள முகவரியில் விண்ணப்பிக்கலாம்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!