தெய்யாறு கிராமத்தில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியை சார் ஆட்சியர் தொடங்கிவைத்தார்

வந்தவாசி வட்டத்துக்கு உள்பட்ட தெய்யாறு கிராமத்தில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியை சார் – ஆட்சியர் பிரபு சங்கர் புதன்கிழமை தொடக்கி வைத்தார்.
தெய்யாறு கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் புதன்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு செய்யாறு சார் – ஆட்சியர் பிரபுசங்கர் தலைமை வகித்து, பயனாளிகளுக்கு நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசினார். அவர் பேசியது:
இந்த ஆண்டு போதிய மழை இல்லாததால் குடிநீர் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. இதனால் குடிநீர் ஆதாரங்களை மேம்படுத்த அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், வறட்சியை உருவாக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்ற மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்தப் பணியில் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம். புதன்கிழமை உலக மகளிர் தினமாகும்.
எனவே, பெண்கள் வாழ்க்கையில் மேலும் மேலும் உயர நாம் பாடுபடுவோம் என்று இந்த தினத்தில் உறுதி எடுத்துக்கொள்ள வேண்டும் என்றார்.
வட்டாட்சியர்கள் எஸ்.முருகன், நரேந்திரன், அரிதாஸ், வட்ட வழங்கல் அலுவலர் சங்கரன், துணை வட்டாட்சியர்கள் மூர்த்தி, திருமலை, தெள்ளாறு வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கோபாலகிருஷ்ணன், விஜயகுமாரி, வருவாய் ஆய்வாளர் சதீஷ்குமார், கிராம நிர்வாக அலுவலர்கள் அருண்குமார், ராஜகுரு உள்ளிட்டோர் முகாமில் பங்கேற்றனர்.
முகாமில் 25 பேருக்கு முதியோர் உதவித்தொகை,

2 thoughts on “தெய்யாறு கிராமத்தில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியை சார் ஆட்சியர் தொடங்கிவைத்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!