Author Posts
ECONOMY

அமெரிக்காவில் பென்ச்மார்க் வட்டி விகிதம் – பெரிய முட்டுக்கட்டையாக இருந்தது!

அமெரிக்காவில் அடித்த மணி, இந்திய பங்குச்சந்தையில் எதிரொலித்தது.. சென்செக்ஸ், நிஃப்டி புதிய உச்சம்..! அமெரிக்க பணவீக்கமும், வட்டி விகித உயர்வும் சர்வதேச முதலீட்டு சந்தையில் பெரிய முட்டுக்கட்டையாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் அமெரிக்காவில் பணவீக்கம் நினைத்தப்படி 2 சதவீதம் வரையில் குறையவில்லை என்றாலும் 3.3 சதவீதம் வரையில் குறைந்தது. இதனால் ஒட்டுமொத்த முதலீட்டு சந்தையும் அமெரிக்காவின் பென்ச்மார்க் வட்டி விகித குறைப்பிற்காக காத்திருந்தது. இந்த நிலையில் அமெரிக்க மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் முதலீட்டாளர்களை குளிர்விக்கும் வகையில் 2024 ஆம் ஆண்டிலும் பணவீக்கம் தொடர்ந்து குறையும் பாதையில் இருந்தால் வட்டி விகிதம் 3 முறை குறைக்கப்படும் என அறிவித்தது. இந்த அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து அமெரிக்க பங்குச்சந்தை தடாலடியாக உயர்ந்தது மட்டும் அல்லாமல் அமெரிக்க அரசு பத்திர முதலீட்டு சந்தையில் இருந்து பெரும

Read More
SPORT

‘உலகக் கோப்பை நாயகன் ரோஜர் பின்னி’…இவரது வரலாறு இதுதான்: ராகுல் டிராவிட்டின் குரு!

பிசிசிஐக்கு தலைவராக ரோஜர் பின்னி நியமிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் வாரியம் 1928ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. 1928 முதல் 2022ஆம் ஆண்டுவரை பிசிசிஐ தலைவராக மொத்தம் 37 பேர் இருந்தனர். இதனை தொடர்ந்து 38ஆவது நபராக ரோஜர் பின்னியை தேர்வு செய்துள்ளனர். ரோஜர் பின்னி இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆவார். 1983ஆம் ஆண்டில் நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை தொடரில் மொத்தம் 18 விக்கெட்களை வீழ்த்தி, அத்தொடரின் அதிக விக்கெட்களை கைப்பற்றிய பௌலராக திகழ்ந்தார். இப்போது இந்திய அணி உலகக் கோப்பை வெல்ல இவரும் முக்கிய காரணம். மதன் லால் கபில் தேவ் ஆகியோருடன் இணைந்து மிரட்டலாக பந்துவீசி வந்தார். பேட்டிங், பந்துவீச்சு, பீல்டிங் என அனைத்திலும் சிறப்பாக செயல்பட்டார். அடுத்து 1985ஆம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற உலக கிரிக்கெட் சாம்பியன் தொடரிலும் அதிக விக்கெட்களை (17) கைப்பற்றிய பௌலராக இருந்தார். ஆஸி மண்ணில் துணைக் க

Read More
ECONOMY

ஐடி ஊழியர்களுக்கு சம்பளமே உயரவில்லை.. ஆனால் உயர் பதவிகளுக்கு 90% சம்பள உயர்வு!

தொடக்கநிலை ஐடி ஊழியர்களுக்கு 10 ஆண்டுகளாக சம்பளமே உயரவில்லை என ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இந்திய ஐடி துறை ஏராளமான ஊழியர்கள், ஃப்ரஷர்களுக்கு வேலைவாய்ப்புகளை அள்ளி வழங்குகிறது. ஆனால், தொடக்கநிலை ஐடி ஊழியர்களின் சம்பளம் 2010ஆம் ஆண்டுக்கு பின் உயரவில்லை அல்லது மிக குறைவாக மட்டுமே உயர்ந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.2011ஆம் ஆண்டு முதல் 2020ஆம் ஆண்டு வரையிலான 10 ஆண்டுகளில் இந்திய ஐடி ஊழியர்களுக்கான ஊதிய மாற்றங்கள் குறித்து Xpheno நிறுவனம் ரிப்போர்ட் வெளியிட்டுள்ளது. இதன்படி, 2010ஆம் ஆண்டுக்கு பின் தொடக்க நிலை ஐடி ஊழியர்களுக்கான சம்பளத்தில் பெரிதாக எந்த மாற்றமும் இல்லை. ஆனால், இதே 10 ஆண்டுகளில் ஐடி நிறுவனங்களின் CXO நிலை பதவிகளில் (CEO, CFO போன்ற உயர் பொறுப்புகள்) இருப்பவர்களின் சம்பளம் 90% உயர்ந்துள்ளதாகவும் இந்த ரிப்போர்ட் கூறுகிறது. இதனால், ஐடி துறையில் இருக்கும் ஊதிய இடைவெளி மற்றும் ஊதிய வள

Read More
ECONOMY

சும்மா சொல்லக்கூடாது.. 2022ல் 50% லாபம் தந்த ஐபிஓக்கள்!

2021ஆம் ஆண்டு ஐபிஓ ( IPO ) ஆண்டு என்றே கூறலாம். மார்க்கெட்டில் பல ஐபிஓக்கள் வந்து சிறு முதலீட்டாளர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்தன. ஐபிஓக்களுக்காகவே டீமாட் கணக்கு தொடங்கி மார்க்கெட்டில் குதித்தவர்கள் ஏராளம்.எனினும், 2022ஆம் ஆண்டில் அவ்வளவு ஐபிஓக்கள் வரவில்லை. மார்க்கெட்டும் பல்வேறு சிக்கல்களுக்கு மத்தியில் ஏற்ற இறக்கத்துடன் காணப்படுகிறது. எனினும், குறிப்பிட்ட சில ஐபிஓக்கள் இந்த ஆண்டிலும் இதுவரையில் சுமார் 50% லாபம் கொடுத்துள்ளன. நடப்பு ஆண்டில் சுமார் 51 ஐபிஓக்கள் 38,155 கோடி ரூபாய் திரட்டியுள்ளன. கடந்த ஆண்டில் 55 ஐபிஓக்கள் 64,768 கோடி ரூபாய் திரட்டியது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டில் 8 பெரிய ஐபிஓக்கள் வந்தன. அதில் எல்ஐசி (LIC) ஐபிஓ மிகப்பெரியது. ஆனால், எல்ஐசி ஐபிஓ தோல்வியில் முடிவடைந்தது. எல்ஐசி பங்கு விலை தொடர்ந்து சரிந்து வருகிறது. அதேபோல பேடிஎம் (Paytm) ஐபிஓவும் கடந்த ஆண்டு தொடங்கியது. ஆ...

Read More