பொது மக்களுக்கு கலெக்டர் அழைப்பு

வந்தவாசி ஜூலை 17 , திருவண்ணாமலை மாவட்டத்தில் அறுகள், ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் மற்றும் நீர்வழிப்பாதைகளை தூர்வார நேரடியாக விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கந்தசாமி விடுத்துள்ள செய்திக்குறிப்பு பின் வருமாறு

மாவட்டத்தில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள் போன்ற நீர் நிலைகள் மற்றும் அவற்றிற்கான நீர்வழி பாதைகளை புனரமைக்க மாவட்ட நிர்வாகத்தால் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இப்பணிகளை பொது மக்கள். தன்னார்வலர்கள். தனியார் தொண்டு நிறுவனங்கள் பங்கேற்புடன் செயல்படுத்தும் போது இப்பணிகளை வெற்றிகரமாக செயல்படுத்த முடியும் என்று மாவட்ட நிர்வாகம் கருதுகிறது.

எனவே தங்கள் வசிக்கும் பகுதியில் உள்ள ஆறுகள், ஏரிகள், குளங்கள் போன்ற நீர்நிலைகள் மற்றும் அவற்றிற்கான நீர்வழி பாதைகள் ஆகியவற்றில் சுத்தம் செய்தல், தூர் வாருதள், கரைகளில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்தல் போன்ற பணிகளை மேற்கொள்ள பொதுமக்கள் கலெக்டரிடம் நேரடியாக விண்ணப்பம் அளிக்கலாம்.

மேற்படி விண்ணப்பங்களின் மீது நீர்நிலை புனரமைப்பு பணிகளை மேற்கொள்வதற்கான அனுமதி ஆணை உடனடியாக அளிக்கப்படும். மேலும் இப்பணிக்கு சம்மந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகள் உதவிடவும் வழிவகை செய்து தரப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

2978total visits,18visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *