தீவிரமடையும் தென்மேற்கு பருவமழை. தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு

சென்னை ஜூன் 29. கேரளாவில் தென்மேற்கு பருவமழை  ஜூலை 2ம் தேதி தீவிரமடைவதாலும், வெப்ப சலனம் காரணமாகவும் தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மிதமான மழைக்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம்  தெரிவித்துள்ளது.

சென்னையில் மாலை மற்றும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வந்தவாசியை பொறுத்தவரை கடந்த வாரத்தில் ஓரளவு மழை பெய்தாலும் நிலத்தடி நீர் மட்டம் உயரும் அளவிற்கு மழை இல்லை. வரும் நாட்களில் பெய்யும் மழை பொறுத்த நிலத்தடி நீர் மட்டம் உயருவதற்கான வாய்ப்புள்ளது.

611total visits,4visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *