வந்தையும் மாரடைப்பும்

வந்தையில் மாரடைப்பால் ஏற்படும் மரணங்களை பற்றியும் சரியான சிகிச்சை கூட அளிக்காமல் செங்கல்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பபடுவதை பற்றியும் நான் முந்தைய பதிவுகளில் குறிப்பிட்டிருந்தது நினைவிருக்கலாம்.

ஏன் இந்த அவலநிலை?

மாரடைப்பு ஏற்பட்டிருப்பது தெரிந்தும் ஏன் மருத்துவர்கள் CPR கூட அளிக்க முன்வருவதில்லை? போன்ற கேள்விகளுக்கு முகநூல் நண்பரின் பதிவிலிருந்து விடை கிடைத்தது.

CPR என்பது மாரடைப்பு எற்பட்ட நோயாளியின் இதயம் மீண்டும் இயங்க துவங்க கொடுக்கப்பட சிகிச்சையாகும். நின்று போன இதயம் மீண்டும் இதயம் துடிக்க துவங்கும்வரை மார்பை பலமான திரும்ப திரும்ப அழுத்தப்படும். பார்ப்பவர்களுக்கு மிகவும் வேதனை அளிக்கும் வகையில் மிகவும் பலமாக பல முறை திரும்ப திரும்ப அழுத்தப்படும்

அதுவும் பலனளிக்காத போது adrenaline மருந்தை ஊசி மூலம் மார்பு வழியாக நேரடியாக செலுத்தி இதய துடிப்பை மீட்க முயற்சி செய்யப்படும்.

சினிமாவில் காண்பிப்பது போல் எல்லா நோயளிகளுக்கும் மின் அதிரவு கொடுத்து இதய துடிப்பை மீட்க வேண்டும் என்பதில்லை..

முக்கிய பிரச்சனைக்கு வருவோம். மேலே கூறிய வழிமுறைகளை பயன்படுத்தி மாரடைப்பால் பாதிக்கபட்ட நோயாளிகளை மீட்க நவீன உபகரணங்கள் எதுவும் தேவைப்படாத நிலையில் ஏன் மருந்துவர்கள் செங்கல்பட்டை நோக்கி கை காண்பிக்க வேண்டும்?

காரணம் பயம். மாரடைப்பால் ஒருவர் மூர்சையடையும் போது நமது செண்டிமென்ட் மட்டுமே மேலோங்கி நிற்கின்றது. மூர்சையடைந்த நபரை மீட்க முயற்சிக்காமல் காற்றுகூட விடாமல் அவரை சூழ்ந்து கொண்டு தலையில் வயிற்றிலும் அடித்துக்கொண்டு அழுவதால் அவரை மீட்க முடியாது என தெரிந்தும் அதனை செய்வது.

மருத்துவரை நோயாளியை தவிர மற்றவர்கள் வெளியேறுங்கள் என கூறினாலும் எதைப்பற்றியும் கவலைப்படாமல் சூழ்ந்துகொண்டு அவரை சிகிச்சை அளிக்க விடாமல் தடுப்பது.

எல்லாவற்றுக்கும் மேலாக நோயாளியை காபாற்ற முடியாமல் போகும் சூழ்நிலையில் மருத்துவரை கொலையாளி போல பாவித்து ஊசி போட்டு கொன்றுவிட்டதாக மூர்க்கமாக மருத்துவரை தாக்குவது போன்ற நிகழ்வுகள் இந்தியாவில் அதிலும் கிராமபுறங்கள் மற்றும் சிறுநகரங்களில் நடப்பது சகஜம். விளைவு?

இங்கு நோயாளியை செங்கல்பட்டு இல்லை சென்னை எடுத்து செல்லுங்கள் எனக்கூறி தப்பித்துக் கொள்கின்றனர்.

மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிக்கு உடன் சிகிச்சை அளிப்பது எவ்வளவு முக்கியம் என தெரிந்தும் தங்களை காப்பாற்றிக்கொள்ள இப்படி செய்வதை எந்தவகையிலும் நியாயபடுத்த முடியாது.

மாரடைப்பு ஏற்பட்ட நோயாளிகளை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் போது மருத்துவரிடம் நோயாளியை காப்பாற்ற முடிந்தவற்றை செய்ய சொல்லுங்கள் எந்த சூழலிலும் அவரை குறை கூற மாட்டோம் என்ற தைரியத்தை மருத்துவர்களுக்கு அளியுங்கள்.

நமக்கு செண்டிமென்டை விட மாரடைப்பு ஏற்பட்டவரின் உயிர் முக்கியம்.

362total visits,1visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *