மீண்டும் பிக்பாஸ்

2006ல் வெளியாகி இந்தியில் பெரும் வெற்றி பெற்ற பிக்பாஸ் தமிழில் 2017ல் வெளியாகி  பெரும் வரவேற்பையும் சில எதிர்ப்புகளையும் பெற்றது. அதனை தொடர்ந்து வெளிவந்த பிக்பாஸ் 2  வெற்றியை தக்கவைத்தாலும் முதல் பிக்பாஸ்க்கு கிடைத்த வரவேற்பு இல்லை.

இந்திலையில் பிக்பாஸ் 3 இந்த மாத கடைசியிலிருந்து விஜய் டிவி ஒளிபரப்ப உள்ளது. போட்டியாளர்கள் யார் என்ற விவரத்தை இதுவரை பிக்பாஸ் குழு வெளியிடாத நிலையில் இவர்கள் தான் போட்டையாளர்கள் ஆளாளாளுக்கு கூறிவருகின்றனர்.

பிக்பாஸ் 2 சற்று தொய்வடைந்த நிலையில்  பிக்பாஸ் 3க்கான போட்டையாளர்களை தேர்வு செய்வதில் முழு கவனம் செலுத்தும் என்று  தெரிகிறது. எனவே இந்த முறை பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை பிக்பாஸ் 3யில் எதிர்பார்க்கலாம்.

ஜெயில் செட் இருக்குமா?

சென்றமுறை போல் இந்தமுறை ஜெயில் செட் இருக்காது என்று தெரிகிறது. மற்றபடி படுக்கை அறைகள் சமையலறை போன்றவற்றில் பெரிய மாற்றங்கள் இருக்காதென்று தெரிகிறது.

செட்டை விட போட்டியாளர்களின் சேட்டைகளே அதிக முக்கியத்துவம் பெரும் என்பதால் பிக்பாஸ் 3 பெரும் எதிர்பார்ப்பை பெற்றுள்ளது.

422total visits,2visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *