டிரைவிங் லைசன்ஸ் பெற குறைந்தபட்ச கல்வி தகுதி தேவையில்லை

புதுடெல்லி ஓட்டுனர் உரிமம் பெற குறைந்தபட்ச கல்வி தகுதி  இனி தேவையில்லை என மத்திய அரசு அறிவித்துள்ளது.

மத்திய மோட்டார் வாகன விதிகள் 1989 விதி எண் 8ன் படி ஓட்டுனர் உரிமம் பெற குறைந்தபட்ச கல்வித் தகுதி 8ம் வகுப்பாகும். இந்த விதியில் மாற்றம் செய்து இனி ஓட்டுனர் உரிமம் பெற அடிப்படை கல்வி தகுதி தேவையில்லை என மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

பொருளாதாரத்தில் பின் தங்கிய கல்வி தகுதி இல்லாத நபர்கள் பயனடையும் வகையில் மத்திய போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பின் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கிய இளைஞர்களுக்கு உதவும் அதே வேளையில் போக்குவரத்துதுறையில் உள்ள 22 லட்சம் பற்றாகுரை ஓட்டுனர்கள் தேவையை பூர்த்தி  செய்யும்.

இருப்பின் இந்த புதிய விதியை பின்பற்றும் பட்சத்தில் சாலை பாதுகாப்பை கருதி ஓட்டுனர் உரிமம் பெற கடுமையான விதிமுறைகள் பின்பற்ற படலாம். சாலை விதிமுறைகளை ஓட்டுனர் உரிமம் பெறும் நபர்கள் முழுவதும் அறிந்துள்ளாரா என்று உறுதிபடுத்திய பிறகே ஓட்டுனர் உரிமம் வழங்கப்படும்.

குறைந்தபட்ச கல்வி தகுதியை நீக்குவதற்கான மசோதாவை கடந்த லோக் சபாவில் தாக்கல் செய்துள்ளது குறிபிடதக்கது.

வரவேற்பு

மத்திய அரசின் இந்த முடிவிற்கு பெரும்பாலோனார்கள் வரவேற்றுள்ளனர். புதிய தலைமுறை கிராமபுற இளைஞர்கள் ஓட்டுனர் பணியாற்ற முழு தகுதி இருந்தும் அடிப்படை கல்வி தகுதியான 8ம் வகுப்பு தேர்ச்சி பெறாததினால் ஓட்டுனர் உரிமம் பெற இயலாத சூழ்நிலை நிலவியது. இனி இதுபோன்ற நிலை இருக்காது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

65total visits,6visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *