விஷால் அணிக்கு எஸ்.வி.சேகர் கொடுத்த அல்வா

தென்னிந்திய நடிகர் சங்க தேர்தல் வரும் 23ம் தேதி சென்னை எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரியில் நடத்த விஷால் அணி மும்முரமாக இருக்கின்றது. இந்நிலையில் சென்னை காவல் துறை பாதுகாப்பு அளிக்க முன்வரவில்லை. அனுமதி கோரி விஷால் அணி உயர்நீதி மன்றத்தை நாடியுள்ள நிலையில் தேர்தல் நடைபெறுவதாக விஷால் அணி அறிவித்துள்ள அதே 23ம் தேதி காலை 10 மணிக்கு அல்வா என்ற நாடகத்தை நடத்த எம்.ஜி.ஆர் ஜானகி கல்லூரிக்கு முன்பதிவு கட்டணத்தை செலுத்தி புக் செய்துள்ளார் நடிகர் எஸ்.வி. சேகர்.

ஏற்கனவே விஷால் அணிக்கும் எஸ்.வி.சேகருக்கும் இருந்த மனகசப்பு காரணமாக விஷால் டீம் அவரை உறுப்பினர் உட்பட அனைத்து பதவிகளிலிருந்தும் நீக்கியது. உடனே நீதிமன்றத்தை  அணுகி உறுப்பினர் பதவியை தக்கவைத்து கொண்டார். இருப்பினும் பழிவாங்க நல்ல சந்தர்பத்தை எதிர்நோக்கிய எஸ்.வி. சேகர் 23ம் எம்.ஜி.ஆர். ஜானகி கல்லூரியை அல்வா கொடுக்க புக் செய்தது நடிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

105total visits,2visits today

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *