வந்தவாசியில் குழந்தை கடத்த வந்ததாக வடமாநிலத்தவருக்கு அடிஉதை

வந்தவாசி நகரில் சந்தேகத்திற்கிடமாக சுற்றி திரிந்த வடமாநில இளைஞரை, குழந்தை கடத்த வந்ததாக கூறி பொதுமக்கள் தாக்கியுள்ளனர்.

கடந்த சில நாட்களாக குழந்தை கடத்தும் வடமாநில கும்பல் ஒன்று தமிழகத்தில் குறிப்பாக வேலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் தகவல் பரவி வருகிறது.

இந்நிலையில், சனிக்கிழமை மாலை வந்தவாசி ஐந்து கண் பாலம் அருகே சந்தேகத்திற்கிடம் அளிக்கும் வகையில் வடமாநில இளைஞர் சுற்றித்திரிந்துள்ளார். அந்த நபரை அப்பகுதியினர் பிடித்து விசாரித்துள்ளனர். தாக்கியும் உள்ளனர்.

இது குறித்து தகவல் அறிந்த வந்தவாசி டிஎஸ்பி பொற்செழியன் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடமிருந்து அந்த இளைஞரை மீட்டுள்ளார். பின்னர் வந்தவாசி தெற்கு காவல்நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில், உத்தரப்பிரதேச மாநிலம் உதய்பூர் மாவட்டத்தை சேர்ந்தவர் என்று தெரிய வந்துள்ளது. தொடர்ந்து அந்த இளைஞரிடம் இருந்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.

இதனிடையே, பிடிபட்ட நபரின் புகைப்படத்துடன் பிள்ளை பிடிக்கும் கும்பல் வந்தவாசியில் சுற்றித்திரிவதாகவும், எச்சரிக்கையாக இருக்குமாறும் அறிவுறுத்தி வாட்ஸ் அப்பில் பொதுமக்கள் சிலர் தகவல் பகிர்ந்து வருகின்றனர்.

உங்கள் பகுதியில் சந்தேகத்திற்கிடமான வகையில் யாரேனும் இருந்தால், கண்ணியமாக விசாரித்து காவல்துறையிடம் தகவல் கொடுக்கவும். மீறி தாக்குவது போன்ற செயலில் ஈடுபடுவது மனிதாபிமானமற்றது மட்டுமல்லாமல் மனித உரிமை மீறலாகும்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!