வந்தவாசியை அடுத்த தெள்ளாறு இராஜா நந்திவர்மன் கலை, அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா

வந்தவாசியை அடுத்த தெள்ளாறு இராஜா நந்திவர்மன் கலை, அறிவியல் கல்லூரியில் விளையாட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
விழாவுக்கு கல்லூரித் தலைவர் வி.முத்து தலைமை வகித்தார். கல்லூரிப் பொருளாளர் எஸ்.பழனிச்சாமி முன்னிலை வகித்தார். கல்லூரி முதல்வர் இரா.ஏழுமலை வரவேற்றார். திரைப்பட நடிகர் கணேஷ்பாபு சிறப்புரை ஆற்றினார். மேலும், விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு அவர் பரிசுகளை வழங்கினார்.
தொடர்ந்து, இலங்கை மத்திய மாகாண சபை உறுப்பினர் ஆர்.இராஜாராம், புதுச்சேரி அன்னை தெரஸா மருத்துவ அராய்ச்சி நிறுவன பேராசிரியை பிரமிளா தமிழ்வாணன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். விழாவில் கல்லூரி இயக்குநர்கள் எஸ்.அப்பாண்டைராஜன், மணி, சிவசங்கரன், ஆனந்த், ராதா, சுரேஷ் உள்ளிட்டோர்
பங்கேற்றனர். கல்லூரி உடற்கல்வி இயக்குநர் சு.சரவணன் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!