இளங்காடு கிராமத்தில் மின்சாரம் பாய்ந்து இளைஞர் சாவு

வந்தவாசி அருகே செவ்வாய்க்கிழமை மின்மாற்றியில் ஏறியபோது, மின்சாரம் பாய்ந்து இளைஞர் உயிரிழந்தார்.வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் மாசி மகன் ஏழுமலை (27). இவரது மனைவி மீனா (23). இந்தத் தம்பதிக்கு ஒரு வயதில் ஆண் குழந்தை உள்ளது.

கடந்த சில மாதங்களாக ஏழுமலை சற்று மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தாராம். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகல் அந்தக் கிராமத்தில் அங்காளம்மன் கோயில் அருகே உள்ள மின்மாற்றி மீது ஏழுமலை திடீரென ஏறியுள்ளார். அப்போது, அவர் மீது மின்சாரம் பாய்ந்ததால் தூக்கி வீசப்பட்டார்.

இதனால் பலத்த காயமடைந்த ஏழுமலையை சிகிச்சைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
எனினும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இது குறித்து மாசி அளித்த புகாரின்பேரில், பொன்னூர் போலீஸார் வழக்குப் பதிந்து, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!