தெள்ளாறு சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம்

வந்தவாசியை அடுத்த தெள்ளாறு சுவாமி அபேதானந்தா பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்த தான முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இந்தக் கல்லூரியின் நாட்டு நலப்பணித் திட்டம், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி ஆகியவை சார்பில் நடைபெற்ற இந்த முகாமை கல்லூரி நிர்வாக இயக்குநர் டி.கே.பி.மணி தொடக்கி வைத்தார்.
தெள்ளாறு வட்டார மருத்துவ அலுவலர் கே.செல்வமுத்துகுமாரசாமி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி மருத்துவர்கள் எ.சுசீந்தர், ஹித்தேன்ஷா, எ.பாக்யஸ்ரீ ஆகியோர் தலைமையிலான குழுவினர் மாணவர்களிடமிருந்து ரத்தத்தை தானமாகப் பெற்றனர். முகாமில் 146 யூனிட் ரத்தம் தானமாகப் பெறப்பட்டது. கல்லூரித் தலைவர் டி.பெருமாள் ரெட்டியார், தாளாளர் வி.ரகுராம், செயலர் ஆர்.சுரேஷ், பொருளாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, இயக்குநர்கள் எஸ்.ரஷ்யராஜ், எஸ்.வேமன்னா, கல்லூரி முதல்வர் ஆர்.ஹரிஹரன், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர் சாந்திலால், சுகாதார ஆய்வாளர் கோதண்டராமன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!