விவசாயிகள் குறைதீர் கூட்டம் பிப்ரவரி 16

திருவண்ணாமலை மாவட்டத்தில் பிப்ரவரி மாதத்துக்கான மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நடைபெறுகிறது.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறும் இந்தக் கூட்டத்துக்கு ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தலைமை வகிக்கிறார். கூட்டத்தில், வேளாண் துறை, விவசாயம் சார்ந்த துறைகளான தோட்டக்கலைத் துறை, வேளாண் வணிகம், வேளாண் பொறியியல் துறை, கால்நடை பராமரிப்புத் துறை, கூட்டுறவுத் துறை, வருவாய்த் துறை, வங்கியாளர்கள் மற்றும் பிற சார்பு துறைகளின் அலுவலர்கள் கலந்து கொண்டு விவசாயிகளின் குறைகள், கோரிக்கைகளுக்குப் பதில் அளிக்கின்றனர்.
எனவே, விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டு தங்களது பொதுப் பிரச்னைகள் தொடர்பாக தெரிவித்துப் பயன்பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!