திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள் தங்களது விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்யுமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தல்

திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களின் வாரிசுகள் குறித்த பதிவுகள் கணினி மயமாக்கப்பட உள்ளது. எனவே, முன்னாள் படைவீரர்கள், படைவீரர்களின் வாரிசுகள் படைப்பணி விவரங்கள், ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணை எண், ஆதார் எண், வங்கிக் கணக்கு எண், வங்கி ஐ.எப்.எஸ்.சி எண் உள்ளிட்ட விவரங்களுடன் தங்கள் புகைப்படத்தை 2 எம்.பி. அளவுக்கு மிகாமலும், படைவிலகல் சான்று, ஓய்வூதிய ஒப்பளிப்பு ஆணையை பி.டி.எப். வடிவத்தில் 4 எம்.பி.க்கு மிகாமலும் ஸ்கேன் செய்து தாங்கள் வசிப்பிடத்துக்கு அருகே உள்ள கணினி மையத்தில் h‌t‌t‌p://‌e‌s‌m‌w‌e‌l.‌t‌n.‌g‌o‌v.‌i‌n என்ற இணையத்தளத்தில் பதிவு செய்ய வேண்டும்.பதிவேற்றம் செய்யப்பட்ட விவரத்தை திருவண்ணாமலை மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்துக்குத் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு இணையதளத்தில் பதிவு செய்ய இயலாதவர்கள், உரிய ஆவணங்களுடன் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகத்துக்கு நேரில் வந்தால் அவர்களுக்கு இணையதளத்தில் பதிவு செய்வது தொடர்பாக உரிய ஆலோசனை வழங்கப்படும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தை நேரிலோ அல்லது 04175233047 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!