திருவண்ணாமலை நீதிமன்றத்தில் உதவியாளர் வேலை

திருவண்ணாமலை மாவட்ட நீதித்துறையில் தமிழ்நாடு நீதித்துறை அமைச்சுப் பணி மற்றும் அடிப்படை பணிகளில் காலியாகவுள்ள கீழ்கண்ட பணியிடங்களுக்கு தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: அலுவலக உதவியாளர் 
காலியிடங்கள்: 09
சம்பளம்: மாதம் ரூ.15,700 + இதர சலுகைகள்
தகுதி: எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: இரவு காவலர் (ஆண்கள் மட்டும்) 

காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.15,700 + இதர சலுகைகள்
தகுதி: தமிழில் எழுத, படிக்க தெரிந்திருந்தால் போதுமானது.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: வரையறுக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தில் பூர்த்தி செய்யப்பட்டு அல்லது தட்டச்சு செய்து பதிவு அஞ்சலில் மட்டுமே அனுப்பப்பட வேண்டும். ஒரு பணிக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே சமர்ப்பிக்க வேண்டும். அனைத்து சான்றிதழ் நகல்களிலும் சுய சான்றொப்பம் செய்யப்பட்டு விண்ணப்பத்துடன் இணைத்து அனுப்ப வேண்டும்.

அனைத்து தகவல் பரிமாற்றங்களும் தேர்வு, நேர்காணலுக்கான அழைப்பு (www.ecourts.gov.in/tn/tiruvannamalai) என்ற இணையத்தில் மட்டுமே தகவல்கள் வெளியிடப்படும். தனிப்பட்ட முறையில் தகவல்கள் அனுப்பப்படமாட்டாது.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம், வேங்கிக்கால், வேலூர் ரோடு, திருவண்ணாமலை – 606 604.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 09.02.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://ecourts.gov.in/sites/default/files/OA.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!