35 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றும் முழு சந்திர கிரகணம்

35 ஆண்டுகளுக்குப் பிறகு தோன்றும் முழு சந்திர கிரகணம் இன்று ஜனவரி 31ம் தேதி நிகழ உள்ளது. இந்த சந்திர கிரகணத்தில் நிலாவானது அளவில் பெரியதாகவும், சிவப்பு நிறத்திலும் காணப்படும்.

இந்த சந்திர கிரகணத்தின் போது சூரிய ஒளி நிலவின் மேல் நேரடியாக படாது. வளிமண்டலத்தால் சிதறடிக்கப்படும் ஒளி, நிலவின் மேல் படுகிறது. இதனால் அதிக அலை நீளமுள்ள சிவப்பு நிறம் மட்டும் நிலாவை அடைந்து நிலா சிவப்பு நிறமாக தோற்றமளிக்கும். இந்த நிகழ்வு ஜனவரி 31 மாலை 5.18 மணிக்கு தொடங்கி மாலை 6.21 மணி முதல் இரவு 7.37 மணி வரை முழு சந்திர கிரகணம் நடைபெறுகிறது. பின்னர் மெல்ல நிழல் விலக ஆரம்பித்து இரவு 8.41 மணிக்கு முழுவதுமாக சந்திர கிரகணம் முடிவடையும். ஆனாலும் இரவு 9.38 மணிக்கு பிறகே முழு ஒளியுடன் சிவப்பு நிலா ஜொலிக்கும்.

இந்த அரிய நிகழ்வை நாம் வெறுங்கண்ணாலே பார்த்து ரசிக்கலாம். இந்த சிவப்பு நிலா இதற்கு முன்னர் அமெரிக்காவில் 152 ஆண்டுகளுக்கு முன்பும் இந்தியாவில் 35 ஆண்டுகளுக்கு முன்னர் தோன்றியுள்ளது. இது மாதிரியான மற்றொரு அரிய நிகழ்வு வரும் ஜூலை மாதத்தில் நடைபெற உள்ளது. ஆனால் அந்த நிகழ்வின் போது நிலா பெரியதாகவோ, சிவப்பு நிறத்திலோ காட்சி அளிக்காது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!