வந்தவாசி அரசு கிளை நூலகத்தில் புத்தக வாசிப்பு விழிப்புணர்வு விழா

வந்தவாசி அரசு கிளை நூலகத்தில் புத்தக வாசிப்பு விழிப்புணர்வு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசி நூலக வாசகர் வட்டம், வந்தவாசி ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி ஆகியவை சார்பில் நடைபெற்ற இந்த விழாவுக்கு நூலக வாசகர் வட்டத் தலைவர் மு.முருகேஷ் தலைமை வகித்தார். கிளை நூலகர் க.மோகன் வரவேற்றார்.
ஸ்ரீஅகிலாண்டேஸ்வரி மகளிர் கல்லூரி நூலகர் கே.கலாராணி, உதவி நூலகர் எஸ்.காந்திமதி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவில் இந்தக் கல்லூரியைச் சேர்ந்த 192 மாணவிகள் நூலகத்தில் உறுப்பினர்களாக இணைந்தனர். மேலும், வினாடி – வினா போட்டிகளில் வெற்றி பெற்ற கல்லூரி மாணவிகளுக்கு புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன.விழாவில் இரண்டாம் நிலை நூலகர் பூ.சண்முகம், ஊர்ப்புற நூலகர் ஜா.தமீம், நூலக உதவியாளர் பு.நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!