வழூரில் இயற்கை வேளாண்மை உற்பத்தியாளர்கள் நிறுவனம் தொடக்கம்

கீழ்நெல்லி வேளாண்மை அறிவியல் மையம் சார்பில், இயற்கை வேளாண்மை உற்பத்தியாளர்கள் நிறுவனம் தொடக்க விழா வந்தவாசியை அடுத்த வழூரில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

விழாவுக்கு நபார்டு வங்கியின் மாவட்ட வளர்ச்சி மேலாளர் வி.ஸ்ரீராம் தலைமை வகித்தார். உற்பத்தியாளர்கள் நிறுவனத்தின் செயல்முறைகள், விவசாயிகளுக்கான சந்தை வாய்ப்புகள் உள்ளிட்டவை குறித்து அவர் விளக்கிக் கூறினார். மேலும், நிறுவனத்தின் உறுப்பினர்கள் பங்குத் தொகையாக ரூ.1,000 செலுத்தும்போது, நபார்டு வங்கியும் அதே அளவு பங்குத்தொகையை அளிக்கும் என்று தெரிவித்தார்.

கீழ்நெல்லி வேளாண்மை அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் வே.சுரேஷ் பேசியதாவது: வேளாண் துறையில் உற்பத்தியாளர்கள் நிறுவனங்கள் மூலம் இடைத்தரகர்களின் குறுக்கீடு பெருமளவில் தடுக்கப்படுகிறது.
விவசாயிகள் தாங்கள் விளைவித்த பொருள்களுக்கு தாங்களே விலை நிர்ணயம் செய்து சந்தைப்படுத்தி, அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தை அனைத்து விவசாயிகளும் பகிர்ந்து கொண்டு நல்ல லாபம் பெறலாம் என்று கூறினார்.
கூட்டத்தில் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுநர் த.மார்க்ரெட், அன்னை தெரேசா தொண்டு நிறுவன இயக்குநர் பலராமன், பொன்னேர் உழவர் மன்றத் தலைவர் வ.வாசுதேவன் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!