வந்தவாசி அருகே பைக் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி விபத்து – இளைஞர் உயிரிழப்பு

வந்தவாசி அடுத்த புதூர் கிராமத்தில் அடையாளம் தெரியாத வாகனம் மோதி, இருசக்கர வாகனத்தில் சென்ற இளைஞர் உயிரிழப்பு; மற்றொரு இளைஞர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி…

இன்று இரவு சுமார் 8 மணியளவில் புதூர் கிராமத்தை சேர்ந்த வெங்கட் (வயது 22) என்பவர் தனது நண்பருடன் இரு சக்கர வாகனத்தில் வீட்டில் இருந்து புறப்பட்டு நெடுஞ்சாலையில் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது எதிரே வந்த வாகனம் எதிர்பாராத விதமாக இரு சக்கர வாகனம் மீது மோதியது. இதில் வெங்கட் உடல் நசுங்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். மற்றொருவர் படுகாயமடைந்த நிலையில் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!