வந்தவாசி ஸ்ரீவேணுகோபால சுவாமி பஜனை கோவிலில் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி மற்றும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி

மார்கழி மாதம் முன்னிட்டு வந்தவாசி ஸ்ரீகிருஷ்ணா கோச்சிங் சென்டர் நிகழ்த்திய திருப்பாவை ஒப்புவித்தல் போட்டி மற்றும் நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி சன்னதி தெரு ஸ்ரீவேணுகோபால சுவாமி பஜனை கோவிலில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கோச்சிங் சென்டர் முதல்வர் பா. சீனிவாசன் தலைமை வகித்தார். ஆசிரியர் ராஜா வரவேற்றார். அன்னபூரணி ஓட்டல் நிர்வாகி திரு என்.நடராஜன், மாவட்ட அரிமா சங்க தலைவர் திரு இரா.சரவணன், இந்து முன்னணி நிர்வாகி திரு. ஆறுமுகம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு அழைப்பாளராக, மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோவில் சக்தி உபாசகர் திருமிகு ஆறு. லட்சுமண ஸ்வாமிகள் கலந்து கொண்டு, மாணவர்கள் கல்வியோடு கூடிய ஆன்மிக செயல்பாடுகளில் ஈடுபட வேண்டும் என்று கூறினார். மேலும் திருப்பாவை ஒப்பித்தல் போட்டியில் வென்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கினார். திருமலை திருப்பதி தேவஸ்தான திருப்பாவை சொற்பொழிவாளர் திரு. சீனிவாச பெருமாள் ராமானுஜதாசர் , கலைச்சுடர்மணி பெ.பார்த்திபன், ஸ்ரீராமகிருஷ்ண மடம் ஆசிரியர் சதானந்தம் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். முடிவில் கோவில் நிர்வாகி பரந்தாம ராமானுஜதாசர் நன்றி கூறினார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!