அடகுக் கடை உரிமையாளரை தாக்கியவர் கைது

வந்தவாசியில் அடகுக் கடை உரிமையாளரைத் தாக்கியவர் கைது செய்யப்பட்டார்.

வந்தவாசி பாக்குக்கார தெருவைச் சேர்ந்தவர் எத்திராஜலு (70). இவர், அதே தெருவில் நகை அடகுக்கடை நடத்தி வருகிறார். கடந்தாண்டு இவரிடம் வந்தவாசியை அடுத்த இளங்காடு கிராமத்தைச் சேர்ந்த ஐயப்பன் (25), நகையை அடகு வைத்தாராம். கடந்த 2 மாதங்களுக்கு முன் அந்த நகையை ஐயப்பனின் உறவினர்கள் மீட்டுச் சென்றனராம்.

இந்த நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை ஐயப்பன் நகையை மீட்க வந்ததாகத் தெரிகிறது. அப்போது, அவரது உறவினர்கள் நகையை மீட்டுச் சென்றது குறித்து அவரிடம் எத்திராஜலு தெரிவித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த ஐயப்பன், எத்திராஜலுவை தாக்கினாராம். இதில் காயமடைந்த எத்திராஜலு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இதுகுறித்து எத்திராஜலு அளித்த புகாரின்பேரில் வழக்குப் பதிந்த வந்தவாசி தெற்கு போலீஸார், ஐயப்பனை திங்கள்கிழமை கைது செய்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!