மேல்மருவத்தூரிலிருந்து வந்தவாசி வழியாக பெங்களூருக்கு ரயில் பாதை அமைக்கக் கோரிக்கை

மேல்மருவத்தூரிலிருந்து வந்தவாசி வழியாக பெங்களூருக்கு ரயில் பாதை அமைக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
வந்தவாசியில் புதன்கிழமை நடைபெற்ற அந்தக் கட்சியின் வந்தவாசி வட்டார மாநாட்டில் இதற்கான
தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மாநாட்டுக்கு ந.சேகர், சு.முரளி ஆகியோர் தலைமை வகித்தனர்.

இதில், வந்தவாசி வட்டார புதிய செயலராக ஜா.வே.சிவராமன், வட்டாரக்குழு உறுப்பினர்களாக ந.இராதாகிருஷ்ணன், சு.சிவக்குமார், தங்கமணி, கா.யாசர்அராபத், கி.சே.மோகன், அ.அப்துல்காதர், கெ.முனியன், சு.கற்பகம் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.
மாநாட்டில் மேலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: திண்டிவனம் – நகரி ரயில் திட்டப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். மூடிக் கிடக்கும் பெரணமல்லூர், தேசூர், மங்கலம், மாமண்டூர் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களை செயல்படுத்த வேண்டும். கீழ்க்கொடுங்காலூர் – உத்திரமேரூர் சாலையை அகலப்படுத்த வேண்டும். சென்னாவரத்தில் பழங்குடியினருக்கான அங்கன்வாடி மையத்துக்கு புதிய கட்டடம் கட்ட வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!