வந்தவாசியில் குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் திட்டம்

வந்தவாசி நகராட்சி குப்பை கிடங்கில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளில் இருந்து உரம் தயாரிக்கும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இந்த திட்டத்திற்கு ரூ.1 கோடியே 69 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ள டெண்டர் விடப்பட்டுள்ளது.

முதற்கட்டப்பணிகளாக கட்டிடம் கட்டவும், தளவாடச் சாமான்கள், மெஷின்களும் விரைவில் அமைக்கப்பட உள்ளது. இதையொட்டி இந்த திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படுகிறது, கட்டிட அமைப்பு, தன்மைகள் குறித்து பார்வையிட்டு தெரிந்து கொள்ள வேண்டும் என வந்தவாசி நகராட்சி அலுவலர்களுக்கு, வேலூர் மண்டல நகராட்சிகளின் நிர்வாக இயக்குநர் எம்.இளங்கோ உத்தரவிட்டிருந்தார்.

இதைத்தொடர்ந்து வந்தவாசி நகராட்சி ஆணையாளர் எஸ்.பார்த்தசாரதி, பொறியாளர் ஆர்.சந்திரசேகரன், உதவியாளர் சிவா, சுகாதார ஆய்வாளர் ராமலிங்கம், துப்புரவு பிரிவு மேற்பார்வையாளர்கள் ஏசுதாஸ், பாத்திமா மற்றும் துப்புரவு பிரிவைச் சேர்ந்த 10 பணியாளர்கள் வேலூர் மாநகராட்சி முதல் மண்டலத்தில் அடங்கியுள்ள தாராபடவேடு, காந்திநகர் ஆகிய இடங்களில் உரக்கிடங்குகளை பார்வையிட்டனர்.

அங்கு குப்பைகள் சேமிக்கப்பட்டு மக்கும், மக்காத குப்பைகள் எவ்வாறு பிரிக்கப்படுகிறது, பிரிக்கப்பட்ட மக்கும் குப்பை எவ்வாறு உரமாக மாற்றம் செய்யப்படுகிறது. இதற்கான மெஷின்கள் மற்றும் பணியாளர்கள், அலுவலர்களின் செயல்பாடுகள் அவர்கள் குறித்து நேரில் பார்வையிட்டு கேட்டறிந்தனர்.

இது தொடர்பாக வந்தவாசி நகராட்சி ஆணையாளர் எஸ்.பார்த்தசாரதி கூறுகையில், ‘‘இந்த திட்டம் முற்றிலும் சுகாதாரத்தை மேம்படுத்தும் திட்டம் ஆகும், மேலும் நகரில் குப்பைகள் தேக்கம் அடையாமல் சேகரித்து அன்றே மக்கும் மக்காத குப்பை என தரம் பிரித்து உரமாக்கும் பணியினை அதற்கான பணியாளர்கள் மேற்கொள்வார்கள்’’ என்றும் இதன் மூலம் சுகாதாரம் மேம்படும் என்றும் தெரிவித்தார்.

3 thoughts on “வந்தவாசியில் குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் திட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Contact Person தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!