வந்தவாசியைச் சேர்ந்த கல்லூரி மாணவர் சென்னையில் ரயிலில் அடிபட்டு மரணம்

வந்தவாசி சேர்ந்த கல்லூரி மாணவர் சென்னையில் ரயிலில் அடிபட்டு உயிரிழந்தார்.

வந்தவாசியை சேர்ந்த சந்தோஷ் (20) என்ற மாணவர் மீனம்பாக்கத்தில் உள்ள ஏ.எம் ஜெயின் கல்லூரியில் பி.ஏ. ஆங்கிலம் 3-ஆம் ஆண்டு படித்து வந்தார்.

வந்தவாசியில் இருந்து தினமும் வரமுடியாத காரணத்தால், சிங்கபெருமாள் கோவிலில் தங்கிப் படித்து வந்தார்.

இன்று (ஆகஸ்ட் 8) கல்லூரி வகுப்பு முடித்து வீடு திரும்புவதற்காக மீனம்பாக்கத்தில் ரயில் ஏரி பயணித்துள்ளார். ரயில் திரிசூலம் வந்ததும், கூட்டத்தின் காரணமாக இறங்கி பின் ரயில் கிளம்பும் போது ஏறியுள்ளார்.

அப்போது கால் தடுமாறி நடைமேடைக்கும், ரயிலுக்கும் நடுவே விழுந்ததால் சம்பவ இடத்திலே சந்தோஷ் உயிரிழந்தார். அவரின் உடலை மீட்ட தாம்பரம் ரயில்வே காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!