வந்தவாசி – காஞ்சிபுரம் நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நடுகிறது வனத்துறை

வந்தவாசி – காஞ்சிபுரம் நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை வனத்துறை நட்டு வருகிறது.

காஞ்சிபுரம் வந்தவாசி இடையே மாநில நெடுஞ்சாலை விரிவாக்கப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோர மரங்கள் வெட்டப்பட்டன. இந்நிலையில், அதற்கு ஈடாக, புதிய மரக்கன்றுகளை நட வனத்துறை ஏற்பாடு செய்துள்ளது.

இது பற்றி கூறியுள்ள செங்கல்பட்டு பிரிவு வன அதிகாரி ராம் மோகன், மாநில நெடுஞ்சாலை 58 (செங்கல்பட்டு – சதுரங்கப்பட்டினம்), நெடுஞ்சாலை 116 (காஞ்சிபுரம் – வந்தவாசி) ஆகியவற்றின் ஓரங்களில் மொத்தம் 17 ஆயிரம் மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டுள்ளதாகவும், முதற்கட்டமாக 9 ஆயிரம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

3 thoughts on “வந்தவாசி – காஞ்சிபுரம் நெடுஞ்சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நடுகிறது வனத்துறை

  • August 1, 2017 at 11:58 pm
    Permalink

    1000த்தில் புளிமரங்கள் வெட்டியதில் மண உளைச்சலோட இருந்தேன்.. வாழ்த்துக்கள் விரைந்த நடவடிக்கைக்கு….அந்த பசுமையில் என் கல்லூரி நினைவுகள் பின்னிப்பினைந்தவை ????

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!