வந்தவாசி அருகே மகன் தள்ளிவிட்டதில் கீழே விழுந்த தந்தை சாவு

வந்தவாசி அருகே தந்தைக்கும் மகனுக்கும் இடையே ஏற்பட்ட தகராறின் போது, மகன் தள்ளிவிட்டதில் கீழே விழுந்த தந்தை உயிரிழந்தார்.
வந்தவாசியை அடுத்த அமுடூரை சேர்ந்தவர் குப்பன் (65). இவருக்கு முருகன்(32), ஏழுமலை (30) என இரு மகன்கள், அமுதா (26) என்ற மகள் ஆகியோர் உள்ளனர். மூன்று பேருக்கும் திருமணமாகிவிட்டது.
அமுதாவின் கணவர் சுந்தரமூர்த்தி, புதிய குடும்ப அட்டை வாங்குவதற்காக அமுதாவின் பெயரை நீக்க வேண்டியிருப்பதால் குப்பனிடம் அவரது குடும்ப அட்டையைக் கேட்டுள்ளார்.
அப்போது, குடும்ப அட்டை ஏழுமலையிடம் இருப்பதாக குப்பன் கூறினாராம். இதையடுத்து, ஏழுமலையிடம் சென்று குடும்ப அட்டையை கேட்டுள்ளார்.
அதற்கு அவர், குடும்ப அட்டை தன்னிடம் இல்லை, தந்தையிடம்தான் உள்ளது என்று கூறியுள்ளார்.
மேலும், சுந்தரமூர்த்தியை அழைத்துக் கொண்டு குப்பனிடம் சென்ற ஏழுமலை, இதுகுறித்து அவரிடம் கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் குப்பனை ஏழுமலை தள்ளிவிட்டாராம். இதில் குப்பன் உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த தெள்ளாறு போலீஸார் அங்கு சென்று குப்பனின் சடலத்தை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

நன்றி: தினமணி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!