அரசுப் பள்ளியில் படித்து 12ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த வந்தவாசி இரட்டையர்கள்!

பிளஸ் 2 தேர்வு முடிவுகளில், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் படித்த இரட்டையர்கள் மு.வெ.நிலாபாரதி, மு.வெ.அன்புபாரதி இருவரும் அதிக மதிப்பெண் பெற்று, மாவட்ட அளவில் முதல் இரு இடங்களைப் பிடித்துள்ளனர்.

மு.வெ.நிலாபாரதி, தமிழில் -195, ஆங்கிலத்தில் – 183, இயற்பியலில் – 197, வேதியியலில் – 200, கணிதத்தில் – 198, உயிரியலில் – 196 என மொத்தம் 1169 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் முதலிடம் பிடித்துள்ளார்.

மு.வெ.அன்புபாரதி, தமிழில் -191, ஆங்கிலத்தில் – 188, இயற்பியலில் – 197, வேதியியலில் – 195, கணிதத்தில் – 199, உயிரியலில் – 195 என மொத்தம் 1165 மதிப்பெண்கள் பெற்று மாவட்ட அளவில் இரண்டாமிடம் பிடித்துள்ளார். அடுத்தகட்டமாக மருத்துவப் படிப்பை தேர்வு செய்துள்ளனர் இந்த இரட்டையர்கள்.

கவிஞர்கள் மு.முருகேஷ், அ.வெண்ணிலா இந்த இரட்டையர்களின் பெற்றோர் ஆவர். வந்தவாசி அரசு பெண்கள் மேனிலைப்பள்ளியில் அ.வெண்ணிலா ஆசிரியையாக பணியாற்றிவருகிறார்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மு.வெ.அன்புபாரதி 495 மதிப்பெண்களும், மு.வெ.நிலாபாரதி 491 மதிப்பெண்களும் பெற்று, செய்யாறு கல்வி மாவட்ட அளவில் சிறப்பிடம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

15 thoughts on “அரசுப் பள்ளியில் படித்து 12ம் வகுப்பு தேர்வில் சாதனை படைத்த வந்தவாசி இரட்டையர்கள்!

 • மே 12, 2017 at 11:27 மணி
  Permalink

  ப்ளஸ்டூவில் பாசான அனைத்து வருங்கால ஊழியர்களுக்கும் வாழ்த்துகள்……. ஃபெயிலான அனைத்து வருங்கால தொழிலதிபர்களுக்கும் வாழ்த்துகள்…… பரீட்சையே எழுதாத வருங்கால அரசியல்வாதிகளுக்கும் வாழ்த்துக்கள்….?

  Reply
 • மே 13, 2017 at 7:13 காலை
  Permalink

  Congrats both of u sisters

  Reply
 • மே 14, 2017 at 12:30 மணி
  Permalink

  You are the real achievers.. I’m very proud to wish you twins. Because i belong to the same city based village. So congrats for you sisters.. may God bless you all forever..

  Reply
 • மே 18, 2017 at 6:03 மணி
  Permalink

  It is my hearty Congratulations to my teacher’s daughters.

  Reply
 • மே 18, 2017 at 6:08 மணி
  Permalink

  I am hartley congratulations to my teacher’s daughters.

  Reply

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!