வந்தவாசி அருகே பைக் சக்கரத்தில் சேலை சிக்கி விபத்து: பெண் சாவு

உத்திரமேரூர் அருகே வயலூர் கிராமத்தை சேர்ந்த சடையப்பன் மகள் பச்சையம்மாள், 25.
இவர், திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே தெள்ளாரில் உள்ள உறவினர் வீட்டிற்கு, தனது உறவினரான சின்ராஜ், 30, என்பவருடன் நேற்று முன்தினம் ஹோண்டா பைக்கில் சென்றுவிட்டு, மாலை, 5:00 மணிக்கு வீடு திரும்பினார்.
விளாங்காடு கீழ்நர்மா கூட்ரோடு அருகே சென்று கொண்டிருந்தபோது, பைக்கின் பின் சக்கரத்தில் பச்சையம்மாள் சேலை சிக்கியது. இதில் நிலை தடுமாறி, இருவரும் கீழே விழுந்தனர்.
படுகாயம் அடைந்த பச்சையம்மாள், உத்திரமேரூர் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, பின் சென்னை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை இறந்தார்.
இதுகுறித்து, கீழ்கொடுங்காலூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!