மின் மோட்டார் பயன்படுத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்: வந்தவாசி நகராட்சி எச்சரிக்கை

வந்தவாசி நகராட்சிப் பகுதியில் குடிநீர் எடுக்க மின்மோட்டாரை பயன்படுத்தினால் குடிநீர் குழாய் இணைப்பு துண்டிக்கப்படும் என்று நகராட்சி ஆணையர் ச.பார்த்தசாரதி எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: வடகிழக்கு பருவமழை குறைந்துள்ளதால் வந்தவாசி நகராட்சிக்கு குடிநீர் வழங்கும் தலைமை நீரேற்று நிலையத்தில் உள்ள கிணறுகளிலும், நகராட்சி சார்பில் நகரில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்துளை கிணறுகளிலும் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறைந்துள்ளது.
எனவே, நகராட்சி சார்பில் வழங்கப்படும் குடிநீரை பொதுமக்கள் சிக்கனமாக பயன்படுத்த வேண்டும்.

மேலும், குடிநீர் எடுக்க மின்மோட்டாரை பயன்படுத்தினால், மின்மோட்டார் பறிமுதல் செய்யப்படுவதுடன், குடிநீர் குழாய் இணைப்பும் துண்டிக்கப்படும் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.

3 thoughts on “மின் மோட்டார் பயன்படுத்தினால் குடிநீர் இணைப்பு துண்டிக்கப்படும்: வந்தவாசி நகராட்சி எச்சரிக்கை

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!