வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் மலையில் தீ விபத்து

வந்தவாசியை அடுத்த வெண்குன்றம் மலையில் நேற்று திடிரென தீ பற்றி எறிந்தது. 1400 அடி உயரம் கொண்ட வெண்குன்றம் மலையில் அரிய வகை மரங்களும் மூலிகைகளும் நிறைந்துள்ளன. இந்த மலைப்பகுதியில் நேற்று மர்ம நபர்கள் சிலர் தீ வைத்ததாக தெரிவிக்கப்படுகிறது. இதனால் இந்த மலையின் அடிவாரத்தில் இருந்து மலையை சுற்றி தீ வேகமாக பரவி வருகிறது. இதனால் மூலிகை செடிகள் மற்றும் அரிய வகை மரங்கள் எரிந்து சேதமாகியுள்ளன. மேலும் மலையில் வாழும் சிறிய வகை உயிரினங்கள் தீயில் கருகியிருக்கலாம் எனவும் அஞ்சப்படுகிறது. இதுகுறித்து, வந்தவாசி தெற்கு போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!