வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் தலைமையில் கூட்டுறவு கடை முன்பு ஆர்ப்பாட்டம்

ரேஷன் பொருட்கள் முறையாக வழங்கப்படுவதில்லை என்று கூறி இன்று (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகள் முன்னர் திமுகவினர் முற்றுகை இட்டு போராட்டம் நடத்திவருகின்றனர்.

ரேஷனில் அத்தியாவசியப் பொருட்கள் தட்டுப்பாடின்றி கிடைப்பதை ஒரு வாரத்தில் உறுதி செய்யாவிட்டால் தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகள் முன்பு திமுக ஆர்ப்பாட்டம் நடத்தும் என கடந்த வாரம் ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் ஆளுங்கட்சித் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததாகக் கூறி, இன்று (திங்கட்கிழமை) தமிழகம் முழுவதிலும் உள்ள ரேஷன் கடைகள் முன்னர் திமுக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறது.

இதில் திமுக நிர்வாகிகள், இளைஞரணி, மகளிரணி உள்ளிட்ட துணை அமைப்புகளின் நிர்வாகிகள் பங்கேற்றுள்ளனர்.

வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் S.அம்பேத்குமார் தலைமையில் திருவண்ணாமலை மாவட்டம்,பெரணமல்லூரில் கூட்டுறவு கடை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!