தென்னாங்கூர் திருவள்ளுவர் பல்கலைக்கழக கலை, அறிவியல் கல்லூரியில் வேலைவாய்ப்பு மற்றும் மென்பயிற்சி பயிலரங்கம்

வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் உள்ள திருவள்ளுவர் பல்கலைக்கழக கலை, அறிவியல் கல்லூரியில் வணிகவியல் துறை சார்பில் வேலைவாய்ப்பு மற்றும் மென்பயிற்சி பயிலரங்கம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் எஸ்.யுவராஜன் தலைமை வகித்தார். கல்லூரி வணிகவியல் துறைத் தலைவர் ஜெ.ஜான்சிராணி ரிஷி வரவேற்றார். செங்கல்பட்டு ஆர்.வி. அரசு கலைக்கல்லூரி வணிகவியல் துறை இணைப் பேராசிரியர் ஜெ.சீனிவாசன் சிறப்புரை ஆற்றினார்.
மேலும், சுயவிவரம், கல்வி மற்றும் தொழில் பற்றிய சிறுதொகுப்பினை தயாரிப்பது எப்படி, நேர மேலாண்மை, மன அழுத்த மேலாண்மை, மென்பயிற்சி உள்ளிட்டவை குறித்து அவர் விளக்கிப் பேசினார். கல்லூரி கணினி துறைத் தலைவர் மனோகரன் மற்றும் சற்குணராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நன்றி: தினமணி

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!