திருவண்ணாமலை அரசுக் கல்லூரி மாணவ, மாணவிகள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம்

திருவண்ணாமலை அரசுக் கல்லூரி மாணவ, மாணவிகள் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான (செட்) வினாத்தாளை தமிழ் மொழியில் வழங்க வேண்டும். தேர்வுக் கட்டணத்தை குறைக்க வேண்டும். அரசு கலைக் கல்லூரியில் உள்ள குடிநீர்ப் பிரச்னையை தீர்க்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி திருவண்ணாமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி முன் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்திய மாணவர் சங்கம் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு சங்கத்தின் மாவட்டச் செயலர் அன்பரசன் தலைமை வகித்தார்.

மறுமொழி இடவும்

உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்பட மாட்டாது தேவையான புலங்கள் * குறிக்கப்பட்டன

WhatsApp chat தொடர்புக்கு இங்கே தட்டுங்கள்!